தங்கம் விலை: நகை வாங்க சீக்கிரம் கிளம்புங்க... விலை குறைஞ்சிருக்கு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 424 ரூபாய் குறைந்துள்ளது. ஜனவரி 1 முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இன்று அதிரடியாக மிகப் பெரிய அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையிலிருந்து 424 ரூபாய் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


ஆபரணத் தங்கத்தின் விலை!


சென்னையில் இன்று (ஜனவரி 7) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,843 ஆக உள்ளது. நேற்று 3,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 53 ரூபாய் குறைந்துள்ளது.


அதேபோல, நேற்று 31,168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 30,744 ரூபாயாகக் குறைந்துள்ளது.