டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் அல்ட்ராஸ் காருக்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, அறிமுகத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் முதல் தயாரிப்பு நிலை மாடலுக்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் நடப்பாண்டியின் இறுதியில், பிஎஸ்-4 எஞ்சின் உடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் தற்போது நேரடியாக பிஎஸ்-6 தரத்திற்கான எஞ்சினை பெற்று விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக இந்த காரினுடைய டீசரை அண்மையில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அதை தொடர்ந்து காருக்கான அறிமுகம் விரைவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.