பிக் ஷாப்பிங் டேஸ் சேல் 2019 ஆனது எப்போது முதல் எப்போது வரை நடைபெறும்? இந்த விற்பனையில் அணுக கிடைக்கும் ஆபர்கள் என்னென்ன? இதோ ஃப்ளிப்கார்ட்டின் பதில்!
பிரபல இகாமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் அதன் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் 2019-ஐ அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு (டிசம்பர் 5) நீடிக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டிவிகள் மற்றும் லேப்டாப்கள் மீது டீல்ஸ், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை ரியல்மி 5, சாம்சங் கேலக்ஸி எஸ் 9 மற்றும் ஆப்பிள் ஐபோன் 7 உட்பட மொத்தம் ஏழு ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் பங்கேற்கும் எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி கார்டுகள் வழியிலான பர்சேஸ் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. சரி வாருங்கள்! இந்த சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் அசல் விலை என்ன? மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி விலை என்ன? என்பதை பற்றி பார்ப்போம்!